/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு
/
பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ADDED : பிப் 04, 2025 06:34 AM
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, மொபட்டில் சென்ற பெண்ணிடம் இருந்து, 7 பவுன் தாலிக்கொடியை, பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, களரம்பட்டி அருகே வடக்கு ரங்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன் மனைவி மோகனப்பிரியா, 34. இவர், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சேசன்சாவடி அருகே சென்று கொண்டி-ருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம
நபர்கள் இருவர், மோகனப்பிரியா கழுத்தில் இருந்த, 7 பவுன் தாலிக் கொடியை பிடித்து இழுத்து பறித்து
சென்றனர். இதில் மோகனப்பிரியாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, வாழப்பாடி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து,
'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.