ADDED : மார் 05, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், எருமாபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், 55. இவரது மனைவி சண்முகவடிவு, 48. இவர் நேற்று முன்தினம் டவுன் பஸ்சில் ஸ்வர்ணபுரிக்கு சென்றுகொண்டிருந்தபோது, சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பையை கொடுத்துள்ளார்.
ஸ்வர்ணபுரியில் இறங்கியதும், பையை பார்த்தபோது அதில் இருந்த 7.5 பவுனில் தோடு, மோதிரம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.