/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
7 பெருமாள் சுவாமிகளுக்கு நாளை சப்த கருட சேவை
/
7 பெருமாள் சுவாமிகளுக்கு நாளை சப்த கருட சேவை
ADDED : பிப் 23, 2024 02:02 AM
சேலம்;சேலத்தில் நாளை, 7 பெருமாள் சுவாமிகளுக்கு சப்த கருட சேவை நடக்க உள்ளது.
மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி பஞ்ச கருட சேவை குழு சார்பில், 9ம் ஆண்டாக, சேலம், பட்டைக்கோவில் அருகே சிங்கமெத்தை பென்னாடம் வெங்கட்ராமன் தெரு - கிருஷ்ணர் கோவில் தெரு சந்திப்பில் நாளை மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை, சப்த கருட சேவை தரிசனம் நடக்க உள்ளது.
இதில் பட்டைக்கோவில் வரதராஜர், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணர், அம்மாபேட்டை சவுந்தரராஜர், அசோக் நகர் லட்சுமி வெங்கடேசர், கிருஷ்ணா நகர் சீதா ராமச்சந்திர மூர்த்தி, எருமாபாளையம் ராமானுஜர் மணிமண்டப ரங்கநாதர், பொன்னம்மாபேட்டை ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களின் பெருமாள் சுவாமிகள், ஒரே இடத்தில் கருட சேவையில் காட்சி அளிப்பர். தொடர்ந்து மண்டகப்படி சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களுக்கு துளசி, தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை, ஸ்ரீவாரி பஞ்சகருட சேவை குழுவினர், சவுராஷ்டிரா சமூகத்தினர் செய்து வருகின்றனர்.