/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளி பண்டிகை 7 டன் குப்பை அகற்றம்
/
தீபாவளி பண்டிகை 7 டன் குப்பை அகற்றம்
ADDED : அக் 22, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அதில் பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி சந்தை, கடைவீதி, தர்மபுரி பிரதான சாலை, ஜவுளி கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில், இரு நாட்களாக மக்கள் கூட்டம், தீபாவளியால் அதிகம் காணப்பட்டது.
அனைத்து தெருக்களில் பட்டாசு குப்பை சிதறி கிடந்தது. தொடர் மழையால் ஈரமாகி, சாலைகளில் ஆங்காங்கே தேங்கியது. நேற்று, டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள், மழையை பொருட்படுத்தாமல், 7 டன் குப்பையை அகற்றினர். அதில் பட்டாசு குப்பை மட்டும், 1 டன்.