/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 அம்மாக்கள் மாயம்: 4 குழந்தைகள் தவிப்பு
/
2 அம்மாக்கள் மாயம்: 4 குழந்தைகள் தவிப்பு
ADDED : அக் 22, 2025 03:30 AM
சேலம்: சேலம், சூரமங்கலத்தை சேர்ந்தவர் விஜயகுமார், 27. சேலம் மாநகராட்சி துாய்மை பணியாளர். இவரது மனைவி முஸ்கான், 21. இவர்களுக்கு, ஆறு ஆண்டுக்கு முன் திருமணமாகி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
முஸ்கான், அடிக்கடி மொபைல் போனில் பேச, கணவர் கண்டித்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்., 19ல் ஏற்பட்ட தகராறில், முஸ்கான் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் திரும்பி வரவில்லை.
அதேபோல், நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி, 37. கார் டிரைவர். இவரது மனைவி ரம்யா, 24. இருவரும் காதலித்து, ஆறு ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில், மகன், மகள் உள்ளனர்.
சேலத்தில் உள்ள ஜவுளி கடையில் ரம்யா வேலை செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் காலை, வீட்டை விட்டு சென்றவர், திரும்பவில்லை. இரு பெண்களையும், சூரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.