ADDED : அக் 06, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலத்தில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய மழை, பின் விட்டு விட்டு பரவலாக பெய்தது. மாவட்டத்தில் மழை நள்ளிரவு வரை நீடித்தது.
நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கரியகோவில் பகுதியில், 70 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி, 63, டேனிஷ்பேட்டை, 45, ஆத்துார், 41, வீரகனுார், 40, ஏற்காடு, ஆணைமடுவு தலா, 29, நத்தக்கரை, 28, ஏத்தாப்பூர், 20, மேட்டூர், 6.8, சேலம், 6, சங்ககிரி, 5.1, வாழப்பாடி, 4.5, ஓமலுார், 3.5, இடைப்பாடி, தம்மம்பட்டி தலா, 2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.