ADDED : நவ 07, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, அங்குள்ள செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நேற்று நடந்தது. ஒன்று முதல், பிளஸ் 2 வரை உள்ள, 68 பள்ளி-களில் படிக்கும், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பரதம்,
சிலம்பம், குழு நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டி-களில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, வட்டார வள மைய அலுவலர்கள், கல்வி அலு-வலர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.