/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மகளிர் உரிமைத்தொகைக்கு 73,915 பேர் மனு வழங்கல்'
/
'மகளிர் உரிமைத்தொகைக்கு 73,915 பேர் மனு வழங்கல்'
ADDED : ஆக 22, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி நகராட்சி அலுவலகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. அங்கு சேலம் கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவரது அறிக்கை:'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை, கடந்த மாதம், 15ல், முதல்வர் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில், 432 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, மனுக்கள் பெற்று, 45 நாட்களுக்குள் தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆக., 20 வரை நடந்த முகாம்களில், பல்வேறு துறைகள் சார்பில், 63,342 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி, 73,915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

