/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
72 லட்சம் லிட்டர் குடிநீர் குழாய் பதிப்பு பணி தீவிரம்
/
72 லட்சம் லிட்டர் குடிநீர் குழாய் பதிப்பு பணி தீவிரம்
72 லட்சம் லிட்டர் குடிநீர் குழாய் பதிப்பு பணி தீவிரம்
72 லட்சம் லிட்டர் குடிநீர் குழாய் பதிப்பு பணி தீவிரம்
ADDED : பிப் 18, 2024 10:06 AM
கொளத்துார்: கொளத்துார் ஒன்றியத்தில் உள்ள, 14 ஊராட்சிகளில் நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி, காவிரி கரையோரம் உள்ளன. அதில் பாலமலை ஊராட்சி நில மட்டத்தில் இருந்து, 3,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த, 3 ஊராட்சிகள் தவிர, காவேரிபுரம், கருங்கல்லுார், பண்ணவாடி, லக்கம்பட்டி உள்பட, 11 ஊராட்சிகள், கொளத்துாரில் உள்ளன. இவற்றில், 80,000 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு காவேரிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தினமும், 31 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லாததால், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 60 கோடி ரூபாயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சாம்பள்ளி ஊராட்சியில் குடிநீர் வடிகால் வாரிய வளாகம் உள்ளது. அங்குள்ள பழைய சுத்திகரிப்பு நிலையம் மூலம், கொளத்துாருக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஆனால் புது குடிநீர் திட்டத்தில் கொளத்துாரில், 11 ஊராட்சிகளில், 167 கிராமங்களுக்கு தினமும், 72 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்வதற்கு, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. தற்போது, 80 சதவீத கட்டுமானம் முடிந்து, இறுதிக்கட்ட பணி நடந்து வருகிறது.