/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்டத்தில் 72வது தேசிய கூட்டுறவு வார விழா ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
மாவட்டத்தில் 72வது தேசிய கூட்டுறவு வார விழா ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
மாவட்டத்தில் 72வது தேசிய கூட்டுறவு வார விழா ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
மாவட்டத்தில் 72வது தேசிய கூட்டுறவு வார விழா ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : நவ 18, 2025 01:44 AM
சேலம், சேலத்தில் நடந்த, 72வது கூட்டுறவு வார விழாவில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பயனாளிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
சேலம் அழகாபுரத்தில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் நேற்று, 72வது தேசிய கூட்டுறவு வார விழா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
கடந்த நான்கரை ஆண்டுகளில், சேலம் மாவட்டத்தில், 5,052 கோடி ரூபாய் விவசாய கடனாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.835 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம், 483 கோடி ரூபாய் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 132 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 20 வகையான கடன் உதவிகள் மூலம் நான்கரை ஆண்டுகளில், 21,856 கோடி லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
கூட்டுறவு வார விழாவில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்திய கால கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், வீட்டு வசதி கடன், சிறு வணிக கடன், வீடு அடமான கடன் என மொத்தம், 2,593 பயனாளிகளுக்கு, 20 கோடியே, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். மேலும், 3.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, 6 வேளாண் சேவை கட்டடங்கள், 3 அலுவலக கட்டடங்கள், நவீனப்படுத்தப்பட்ட 4 அலுவலக கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தா தேவி, சேலம் ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம், கள்ளக்குறிச்சி எம்பி., மலையரசன், மேயர் ராமச்சந்திரன், மேற்கு தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., அருள், மேட்டூர் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம், சேகோசர்வ் மேலாண்மை இயக்குனர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஆவின் பொது மேலாளர் குமரேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் குழந்தைவேலு, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

