/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு வேளாண் விதை பண்ணையில் 77 டன் நெற்பயிர் அறுவடை
/
அரசு வேளாண் விதை பண்ணையில் 77 டன் நெற்பயிர் அறுவடை
அரசு வேளாண் விதை பண்ணையில் 77 டன் நெற்பயிர் அறுவடை
அரசு வேளாண் விதை பண்ணையில் 77 டன் நெற்பயிர் அறுவடை
ADDED : பிப் 19, 2025 07:05 AM
மேட்டூர்: கொளத்துார் அரசு வேளாண் விதைப்பண்ணை, மாதையன்குட்டையில் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோரம் உள்ளது. கடந்த ஆண்டு கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறந்ததால், செப்டம்பரில், பண்ணையில், 44 ஏக்கரில் பல்வகை நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. நடப்பு பிப்ரவரியில், பயிர்கள் முதிர்ந்த நிலையில் அறுவடை தொடங்கியது.
இதில் பொன்னி நெல், கோ 55, 52; ஏ.டீ.டி., 45, 54, 57; டி.கே.எம்., 13 என, 69,479 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்டது. மேலும், 5 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல், 8 டன் அறுவடை செய்து களத்தில் உலர வைக்கப்பட்டுள்ளது. மொத்தம், 77.5 டன் நெல் அறுவடை செய்த நிலையில், அவை சேலம், வெளிமாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் விற்பனை செய்யப்படும்.
வரும் மாதம் ராகி, 10, சோளம், 2, குதிரைவாலி, 10, உளுந்து, 22 என, 44 ஏக்கரில் சிறுதானிய வகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட உள்ளது. அவைகளில் ராகி அதிகபட்சம், 110 முதல், 120 நாளில் அறுவடை செய்யலாம். நெற்பயிர்கள் அறுவடை செய்த நிலையில், 200க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் தலா, 200 ரூபாய்க்கு ஒப்பந்த அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது.

