/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேலைவாய்ப்பு முகாமில் 796 பேருக்கு பணி ஆணை
/
வேலைவாய்ப்பு முகாமில் 796 பேருக்கு பணி ஆணை
ADDED : ஆக 10, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழக ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில், வாழப்பாடி அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. 1
58 நிறுவனங்கள் பங்கேற்றன. 3,394 பேர் வேலை கேட்டு வந்திருந்தனர். அவர்களில், 493 பெண்கள், 6 மாற்றுத்திறனாளி உள்பட, 796 பேர் தேர்வாக, உடனே பணி ஆணை வழங்கப்பட்டது. அத்துடன், 2ம் நிலை தேர்வுக்கு, 193 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். வேலை வாய்ப்பு துணை இயக்குனர் மணி உள்பட பலர் உடனிருந்தனர்.