/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., முன்னாள் முதல்வரின் 7ம் ஆண்டு நினைவு நாள்
/
தி.மு.க., முன்னாள் முதல்வரின் 7ம் ஆண்டு நினைவு நாள்
தி.மு.க., முன்னாள் முதல்வரின் 7ம் ஆண்டு நினைவு நாள்
தி.மு.க., முன்னாள் முதல்வரின் 7ம் ஆண்டு நினைவு நாள்
ADDED : ஆக 05, 2025 01:12 AM
சேலம், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலரும்,
எம்.பி.,யுமான செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமாக இருந்த கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு, வரும், 7ல் மரியாதை செலுத்தப்படுகிறது.
ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்து முற்போக்கு லட்சியங்களுக்காக, தனது வாழ் நாள் முழுவதும் வாதாடி போராடியவர் கருணாநிதி. அவர் நம்மை விட்டு பிரிந்தாலும், சரித்திர சாதனைகளாலும், கலாசார நினைவுகளோடு நம்மோடு வாழ்ந்து வருகிறார்.
அவரது நினைவு நாளை முன்னிட்டு வரும் 7ம் தேதி காலை
8:30 மணியளவில் தாரமங்கலத்தில் உள்ள கருணாநிதி திருவுருவ சிலைக்கு சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்,
எம்.பி.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், நிர்வாகிகள், வார்டு, கிளை செயலர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.