/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் ஓட்டிச்சென்ற 7ம் வகுப்பு மாணவர் பலி
/
பைக் ஓட்டிச்சென்ற 7ம் வகுப்பு மாணவர் பலி
ADDED : நவ 04, 2024 05:51 AM
காரிப்பட்டி: சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் தசரதன், 36. இவரது மனைவி பிரியா, 31. இவர்கள், 15 ஆண்டுகளாக குடும்பத்துடன், வாழப்பாடி, அனுப்பூரில் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்கின்றனர்.
இவர்களது மூத்த மகன் சந்துரு, 13, அனுப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தான். அவன், நேற்று காலை, 8:30 மணிக்கு, கூட்டாத்துப்பட்டி அருகே ஜலகண்டாபுரத்தில், தந்தையின், 'சி.டி., 100' பைக்கை, ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்றான். எதிரே, கூட்டாத்துப்பட்டியை சேர்ந்த தண்டபாணி, 40, ஓட்டி வந்த, 'கியா' கார், பைக் மீது மோதியதோடு, சாலையோர தென்னை மரத்தில் மோதி நின்றது. இதில் சந்துரு, சம்பவ இடத்தில் உயிரிழந்தான். காரிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.