/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்
/
ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்
ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்
ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 8 பேர் சேலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்
ADDED : நவ 21, 2025 02:03 AM
சேலம்,கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அங்கு, ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியதாக, சேலத்தை சேர்ந்த த.வெ.க., தொண்டர்கள், 8 பேர் மீது, கரூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
அதில் முன்ஜாமின் கேட்டு, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள், கரூர் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 8 பேரும், 'சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், 2 வாரத்துக்கு ஆஜராகி, தினமும் காலை, 10:30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்' என உத்தரவிடப்பட்டது.
அதன்படி நேற்று, சேலத்தை சேர்ந்த, த.வெ.க., தொண்டர்கள் மணிகண்டன், ஹரிஹரசுதன், அன்புமணி, செந்தில்குமார், தமிழ் அமுதன், பெரியசாமி, சுப்பிரமணி, கவுதமன், ஆகியோர் ஆஜராகி கையெழுத்திட்டனர்.