/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டை திறந்து போட்டு துாங்கிய பெண் முகமூடி கும்பல் நுழைந்து தாலி பறிப்பு

ADDED : நவ 21, 2025 02:03 AM
தலைவாசல், வீட்டில் துாங்கிக்கொண்டிருந்த பெண்ணை எழுப்பி மிரட்டி, அவரது, 2 பவுன் தாலிக்கொடியை, முகமூடி அணிந்த, 2 பேர் பறித்துச்சென்றனர்.
தலைவாசல், நத்தக்கரையை சேர்ந்த, சக்திவேல் மனைவி ஜெயசூர்யா, 25. 'பொக்லைன்' டிரைவரான இவரது கணவர், கேரள மாநிலத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம், வீட்டில், 'டிவி' பார்த்துக்கொண்டிருந்த ஜெயசூர்யா, வெளிப்புற கதவை தாழிடாமல் துாங்கிவிட்டார். நள்ளிரவு, 12:30 மணிக்கு, பனியன், டவுசர் அணிந்து, முகத்தில் துண்டு கட்டியிருந்த இருவர், உருட்டுக்கட்டையுடன் வீட்டில் புகுந்தனர்.
தொடர்ந்து ஜெயசூர்யாவை எழுப்பி, அவர் அணிந்திருந்த, 2 பவுன் தாலிக்கொடியை கழற்றி தரும்படி மிரட்டி பெற்றுக்கொண்டனர். பின் அந்த இருவரும் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து ஜெயசூர்யா புகார்படி, தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.