/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டை பிரித்து மூதாட்டியிடம் 8 பவுன் பறிப்பு
/
ஓட்டை பிரித்து மூதாட்டியிடம் 8 பவுன் பறிப்பு
ADDED : நவ 08, 2025 05:02 AM
காரிப்பட்டி:சேலம், அம்மாபேட்டை அருகே தாதம்பட்டியை சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜேந்திரன். இவரது மனைவி பிரபா, 65. இவரது தந்தை தெய்வக்கண்ணன், தாய் தனலட்சுமி. இத்தம்பதியர், காரிப்பட்டி அடுத்த சின்னகவுண்டாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வசித்தனர். 5 மாதங்களுக்கு முன் தெய்வகண்ணன் உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பிரபா, தாய் வீட்டுக்கு சென்று, அங்கேயே தங்கினார். நள்ளிரவில் இருவரும் துாங்கிக்கொண்டிருந்த நிலையில், வீட்டின் ஓட்டை பிரித்து, மர்ம நபர் உள்ளே நுழைந்தார். தொடர்ந்து பிரபா அணிந்திருந்த, 7 பவுன் தாலிக்கொடி, 1 பவுன் தாலியை அறுத்து பறித்துள்ளார். பிரபா விழித்து கூச்சலிட, அந்த நபர், தாலிக்கொடியுடன் தப்பிவிட்டார். இதுகுறித்து பிரபா புகார்படி, காரிப்பட்டி போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

