/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
44 ஏக்கரில் 8 ரக நெல் சாகுபடி விரைவில் அறுவடை தொடக்கம்
/
44 ஏக்கரில் 8 ரக நெல் சாகுபடி விரைவில் அறுவடை தொடக்கம்
44 ஏக்கரில் 8 ரக நெல் சாகுபடி விரைவில் அறுவடை தொடக்கம்
44 ஏக்கரில் 8 ரக நெல் சாகுபடி விரைவில் அறுவடை தொடக்கம்
ADDED : டிச 18, 2024 07:13 AM
மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டை, கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோரம், அரசு வேளாண் விதை பண்ணை, 57.90 ஏக்கரில் உள்ளது. அதில் வேளாண் அலுவலக கட்டடங்கள் தவிர மீதி, 44 ஏக்கரில் விதை நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த ஆண்டு கால்வாயில் நீர் திறக்கப்படாததால், சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்கள், குறைந்த இடத்தில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டன. நடப்பாண்டு கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதால், 44 ஏக்கரிலும் நெற்பயிர்கள் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு நன்கு வளர்ந்து பச்சைப்பசேல் என காட்சியளிக்கிறது.
குறிப்பாக, 10 ஏக்கரில் கோ - 55; தலா, 8 ஏக்கரில் ஏடீடி, 54, 45 ரகங்கள்; 6 ஏக்கரில் வெள்ளை பொன்னி; 5 ஏக்கரில் துாயமல்லி ரகம்; 3 ஏக்கரில், டிகே.எம்., 13; தலா, 2 ஏக்கரில் கோ - 52 ரகம், ஏடீடி - 57 ரகம் ஆகும். வரும் மாதத்தில் அதன் அறுவடை தொடங்கும். அறுவடைக்கு பின் நெல்மணிகள் சுத்திகரிப்பு செய்து சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க, வட்டார வேளாண் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். விதை நெல் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் அருகே உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.