/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது
/
8ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது
ADDED : நவ 13, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம்
மாவட்டம் ஆத்துார் அடுத்த தம்மம்பட்டியை சேர்ந்தவர் இஸ்மாயில், 54.
எட்டாம் வகுப்பு படித்த இவர், தனியார் மருத்துவமனையில் மருத்துவரின்
உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். சில ஆண்டுகளாக, ஆங்கில
மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். நேற்று மருத்துவ அலுவலர்
செந்தில்குமார் தலைமையில் குழுவினர், போலீசார் ஆய்வு செய்தபோது,
அவரது மொபட், வீட்டில் ஊசி, மருந்துகள் இருந்தன.
இதனால் போலி
மருத்துவரான இஸ்மாயிலை, மருத்துவ குழுவினர் பிடித்து தம்மம்பட்டி
போலீசில் ஒப்படைத்தனர். செந்தில்குமார் புகார்படி, இஸ்மாயிலை
நேற்று, போலீசார் கைது செய்தனர்.

