/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவர் மனைவியிடம் பட்டப்பகலில் 9 பவுன் தாலி பறிப்பு
/
மருத்துவர் மனைவியிடம் பட்டப்பகலில் 9 பவுன் தாலி பறிப்பு
மருத்துவர் மனைவியிடம் பட்டப்பகலில் 9 பவுன் தாலி பறிப்பு
மருத்துவர் மனைவியிடம் பட்டப்பகலில் 9 பவுன் தாலி பறிப்பு
ADDED : நவ 28, 2024 01:15 AM
மருத்துவர் மனைவியிடம்
பட்டப்பகலில் 9 பவுன் தாலி பறிப்பு
ஆத்துார், நவ. 28-
சேலம் மாவட்டம் ஆத்துார், காந்தி நகரை சேர்ந்த மருத்துவர் விஸ்வநாதன். இவரது மனைவி பத்மினி, 66. 'இன்னர்வீல்' சங்க மகளிர், முன்னாள் தலைவியான இவர், நேற்று காலை, 11:00 மணிக்கு, அதே பகுதியை சேர்ந்த, கலா, 38, என்பவருடன், நரசிங்கபுரம், திருநாவுக்கரசு தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், பத்மினி அணிந்திருந்த, 9 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு, பைக்கில் வேகமாக சென்றார். பத்மினி, கலா ஆகியோர் கூச்சலிட்டும் பயனில்லை.
இதில் பத்மினியின் இடதுபுற கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் டவுன் போலீசார்
விசாரித்து, மர்ம நபரை தேடுகின்றனர்.