ADDED : ஜன 05, 2025 01:19 AM
சேலம், சேலம், அம்மாபேட்டை, வைத்தி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், 46. இவர் மனைவியுடன், கடந்த டிச., 31ல், சேலம், 4 ரோட்டில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்துக்கு வந்தார். அப்போது, அவரது மொபட்டில், 5 பவுன் சங்கிலி, 400 ரூபாயுடன், பர்சை வைத்து பூட்டி சென்றார். மீண்டும் வந்தபோது பர்ஸ் திருடுபோயிருந்தது. செந்தில்குமார் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மல்லுார், பாவடி தெருவை சேர்ந்தவர் ஆனந்த், 44. விசைத்தறி தொழில் செய்கிறார். கடந்த, 2 இரவு தறி பட்டறையை பூட்டி விட்டு பக்கத்து அறையில் துாங்கினார். மறுநாள் காலை பார்த்தபோது, பட்டறை கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்பட, 4 பவுனை காணவில்லை. அவர் புகார்படி, மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

