/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
9.69 லட்சம் பாடப்புத்தகங்கள் சேலம் பள்ளிகளுக்கு வினியோகம்
/
9.69 லட்சம் பாடப்புத்தகங்கள் சேலம் பள்ளிகளுக்கு வினியோகம்
9.69 லட்சம் பாடப்புத்தகங்கள் சேலம் பள்ளிகளுக்கு வினியோகம்
9.69 லட்சம் பாடப்புத்தகங்கள் சேலம் பள்ளிகளுக்கு வினியோகம்
ADDED : மே 30, 2025 02:28 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகங்களை வழங்கும்படி, பள்ளிகளுக்கு, 9.69 லட்சம் பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பள்ளி திறக்கும் நாளன்றே, மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்களை வழங்கும்படி, அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வினியோகம் நடந்து வருகிறது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள, 1,640 அரசு, அதன் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், 1 முதல், 5ம் வகுப்பு வரை தமிழ் வழியில், 67,700 மாணவர்கள், ஆங்கில வழியில், 31,906 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் வழியில், 67,700 பாடப்புத்தகங்கள், ஆங்கில வழியில், 31,906 பாடப்புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல் மாவட்டத்தில் உள்ள, 350 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், 6 முதல், பிளஸ் 2 வரை தமிழ் வழியில், 1.17 லட்சம் மாணவ, மாணவியர், ஆங்கில வழியில், 61,814 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அவர்களுக்கு தமிழ் வழியில், 6.36 லட்சம் பாடப்புத்தகங்கள், ஆங்கில வழியில், 2.33 லட்சம் பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. வினியோகம் முறையாக நடந்ததா, பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளதா என, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று, தாரமங்கலம், இடையப்பட்டி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.