/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மூன்று நாள் கோடை சுற்றுலா சென்ற 98 பேர்'
/
'மூன்று நாள் கோடை சுற்றுலா சென்ற 98 பேர்'
ADDED : மார் 31, 2025 02:12 AM
சேலம்: தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஆன்மிக சுற்றுலா மட்டும் செயல்-பாட்டில் உள்ளது. ஒருநாள் சுற்றுலா உள்பட, 30 தொடர் சுற்-றுலா திட்டங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்பட, 15க்கும் மேற்பட்ட பருவகால சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்-தப்படாமல் உள்ளன. கோடைகால சிறப்பு சுற்றுலா திட்டம் எதையும் அறிவிக்காமல், தமிழக சுற்றுலாத்துறை மெத்தனம் காட்டுவதாக, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிக்கை: சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்-றுலா பயணியருக்கு, அரைநாள் முதல், 14 நாட்கள் வரை, 52 வகை தொகுப்பு சுற்றுலாக்கள் செயல்படுத்தப்படுகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு, 3 நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு - ஒகேனக்கல், குற்றாலம், மைசூரு - பெங்களூரு மற்றும் மூணாறு சுற்றுலா செல்ல, 2024 நவ., 8 முதல் முன்பதிவு தொடங்கி நடக்கிறது.
கொடைக்கானல் சுற்றுலாவில், 6 தொகுப்புகளில், 48 பேர்; ஊட்டி சுற்றுலாவில், 5 தொகுப்பில், 41 பேர்; மூணாறு சுற்று-லாவில், 9 பேர் முன்
பதிவு செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இன்னொரு தொகுப்பில், 4 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தவிர குழு மற்றும் ஆயத்த சுற்றுலா, அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகை சுற்றுலாவுக்கு ஏற்பாடு நடக்கிறது. இத்திட்டங்களில் முன்பதிவு செய்ய, www.ttdconline.com என்ற இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.