ADDED : நவ 06, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி, புதுப்பாளையத்தில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே, மாயவன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை உள்ளது. அந்த மண் சாலையில் நேற்று, 6 மாத ஆண் சிசு இறந்து கிடந்தது. எறும்புகள், நாய்கள் சூழ்ந்தபடியும் இருந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்து, வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார், சிசுவை கைப்பற்றி, சாலையில் வீசியது யார், சிசு யாருடையது, எப்போது வீசப்பட்டது என அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.