/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலையில் சிக்கியவர் வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'
/
கொலையில் சிக்கியவர் வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'
ADDED : அக் 25, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொலையில் சிக்கியவர்
வழிப்பறி வழக்கில் 'வளைப்பு'
காரிப்பட்டி, அக். 25-
அயோத்தியாப்பட்டணம் அருகே தெப்பக்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 34. வாழப்பாடியில் இருந்து சேலம் நோக்கி, நேற்று காலை, 7:00 மணிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். மின்னாம்பள்ளி சந்தை அருகே சென்றிபோது, மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த, 1,900 ரூபாய், மொபைல் போனை பறித்துச்சென்றார். இதுகுறித்து பிரபாகரன் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரித்து, குள்ளம்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்த கண்ணன், 37, என்பவரை நேற்று கைது செய்தனர். மேலும் அவர் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

