/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாயில் உடைப்பு; இன்றும் குடிநீர் 'கட்'
/
குழாயில் உடைப்பு; இன்றும் குடிநீர் 'கட்'
ADDED : செப் 25, 2024 07:16 AM
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேட்டூர் தனி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் நேற்று காலை, சாரதா கல்லுாரி சாலையில் தெய்வீகம் திருமண மண்டபம் அருகே, தனிக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக ஓடியது. மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உத்தரவுப்படி குடிநீர் நிறுத்தப்பட்டு பழுதுபார்ப்பு பணி தொடங்கப்பட்டது.
இதனால் அஸ்தம்பட்டி மண்டலத்தில், 4, 5, 7, 8 மட்டுமின்றி, 12 முதல், 16; 24 முதல், 26; 29 முதல், 31வது வார்டுகள், அம்மாபேட்டை மண்டலத்தில், 9 முதல், 11; 33 முதல், 35; 38 முதல், 40வது வார்டுகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் பழுதுபார்ப்பு பணி முடியாததால், இன்றும் அப்பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என, கமிஷனர் தெரிவித்தார்.