/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் ஆறாக ஓடிய நீர்
/
குடிநீர் குழாயில் உடைப்பு சாலையில் ஆறாக ஓடிய நீர்
ADDED : அக் 12, 2024 01:00 AM
குடிநீர் குழாயில் உடைப்பு
சாலையில் ஆறாக ஓடிய நீர்
மேட்டூர், அக். 12-
காடையாம்பட்டி திட்ட குழாயில், நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் பாலத்தில் ஆறாக ஓடி வீணானது.
மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி கரையோரம், காடையாம்பட்டி கூட்டுகுடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. இதில் தினமும், 2.60 கோடி லிட்டர் முதல், 2.80 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. அந்த நீர் சுத்திகரிப்பு செய்து ஓமலுார், காடையாம்பட்டி தாலுகாக்களில் உள்ள நகரங்கள், கிராமங்களுக்கு வினியோகம் செய்யப்
படுகிறது.
மேட்டூர்-தொப்பூர் நெடுஞ்சாலையில், அனல்மின் நிலையம் அருகே, காவிரி உபரி நீர் செல்லும் பாலத்தின் ஒரு பகுதியில் காடையாம்பட்டி திட்ட குழாய் உள்ளது. இந்த குழாய்கள் அமைத்து, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், தற்போது அனல்மின் நிலையம் அருகாமையில் உள்ள பழைய குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
நேற்று காலை, 7:00 மணியளவில் பாலத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பீறிட்டு வெளியேறி நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியது. குடிநீர்வாரிய அலுவலர்கள் குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். குழாய் உடைந்து குடிநீர் சாலையில் ஓடியதால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதித்தது.

