/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தை தவிர்க்க கண்காட்சி விழிப்புணர்வுக்கு அழைப்பு
/
விபத்தை தவிர்க்க கண்காட்சி விழிப்புணர்வுக்கு அழைப்பு
விபத்தை தவிர்க்க கண்காட்சி விழிப்புணர்வுக்கு அழைப்பு
விபத்தை தவிர்க்க கண்காட்சி விழிப்புணர்வுக்கு அழைப்பு
ADDED : பிப் 03, 2024 03:51 AM
சேலம்: சேலத்தில் ஸ்ரீகோகுலம் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படம், திரை காட்சி, தெய்வீக திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. வரும், 5 வரை நடக்கும் நிகழ்ச்சியில், மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி வரவேற்றார். தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி, கண்காட்சி, திரைப்பட காட்சியை தொடங்கி வைத்தார்.
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் நடந்த பல்வேறு விபத்து தகவல்கள், படங்களுடன் இடம்பெற்றிருந்தன. அவை திரையிலும் தனியே காட்சிப்படுத்தப்பட்டன. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், போக்குவரத்து துணை கமிஷனர் பிரபாகரன், லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் தன்ராஜ், பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் சுந்தரேசன், மருத்துவர்கள், மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும், சாலை விதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு இலவசமாக வழங்கப்பட்டன.
காலை, 9:30 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சி, திரை நிகழ்ச்சியை கட்டணமின்றி பார்வையிடலாம். இதை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பயிற்சி மருத்துவர், ஓட்டுனர், நடத்துனர், சமூக ஆர்வலர் என, அனைத்து தரப்பினரும் பார்வையிட்டு பயன்பெறலாம் என, மேலாண் இயக்குனர் அர்த்தனாரி கேட்டுக்
கொண்டார்.

