ADDED : ஏப் 23, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: இயற்கை உபாதைக்குசென்ற தம்பதி மற்றும் தட்டி கேட்ட தந்தை ஆகியோரை தாக்கிய நபர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டி, புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 48. இவரது மகன், மருமகள் ஆகியோர் கடந்த, 18ல், இயற்கை உபாதைக்கு சென்றுள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர், தம்பதியை தாக்கியுள்ளார். இதுகுறித்து முருகேசன், தனது மகன், மருமகளை தாக்கியது குறித்து கேட்டபோது, அவரையும் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த முருகேசன், செந்தாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். முருகேசன் புகார்படி, லட்சுமணன் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

