/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிரியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு
/
ஆசிரியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு
ஆசிரியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு
ஆசிரியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மீது வன்கொடுமை பிரிவில் வழக்கு
ADDED : ஜன 03, 2024 11:19 AM
வீரபாண்டி: அரசுப்பள்ளி ஆசிரியரை, பள்ளிக்குள் புகுந்து போதையில் தாக்கிய, தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்த தேவகுமார் மனைவி உமா. 42, இவர், சித்தர்கோவில் அருகே லகூவம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இதே பகுதியை சேர்ந்த ஒன்றிய தி.மு.க., பிரதிநிதியான தம்பிதுரை, 52, என்பவரின், 7 வயது மகள், உமா ஆசிரியையாக உள்ள வகுப்பில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மகள் படிப்பு குறித்து, தம்பிதுரை மது போதையில் வகுப்பறைக்கு சென்று உமாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின் உமா, மற்றொரு ஆசிரியரிடம் பேசி கொண்டிருந்ததை தன் மொபைல் போனில் படம் எடுத்தார். இதை உமா தட்டிக்கேட்டு தம்பிதுரையை அவரும் தன் மொபைல் போனில் படம் எடுத்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. போதையில் இருந்த தம்பிதுரை விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் தம்பிதுரை அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியை உமா புகார் படி இரும்பாலை போலீசார், தம்பிதுரை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல் தம்பிதுரை அளித்த புகார்படி, ஆசிரியை உமா மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு பள்ளியில் தி.மு.க., பிரமுகர் மற்றும் ஆசிரியை எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.