/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மிளகு, காபி கொட்டை திருட்டு தோட்ட தொழிலாளி மீது வழக்கு
/
மிளகு, காபி கொட்டை திருட்டு தோட்ட தொழிலாளி மீது வழக்கு
மிளகு, காபி கொட்டை திருட்டு தோட்ட தொழிலாளி மீது வழக்கு
மிளகு, காபி கொட்டை திருட்டு தோட்ட தொழிலாளி மீது வழக்கு
ADDED : மார் 15, 2024 03:55 AM
ஏற்காடு: ஏற்காடு, கீரைக்காட்டில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிபவர் கோவிந்தசாமி, 37. இவர் கடந்த, 10ல் இரவு பணிக்கு சென்றார். அப்போது மிளகை பறித்து மூட்டை கட்டி தோட்டத்தில் பதுக்கி வைத்தார். அதை பார்த்த, தோட்ட தொழிலாளிகள், அதன் மேலாளர் சுரேஷூக்கு தகவல் கொடுத்தனர். மறுநாள் இரவு, மேலாளர், தொழிலாளர்கள், மறைந்திருந்து
கண்காணித்தனர்.
அப்போது வந்த கோவிந்தசாமி, மிளகு மூட்டையை துாக்கிக்கொண்டு புறப்பட்டபோது, மேலாளர் பிடிக்க முயன்றார். ஆனால் அவர், மூட்டையை போட்டுவிட்டு
தப்பி ஓடும்போது தவறி விழுந்ததால் சிக்கிக்கொண்டார். பின் திருடியதை ஒப்புக்கொண்டு, ஏற்கனவே திருடிய இரு மூட்டை காபி கொட்டை, ஒரு மூட்டை மிளகை, தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். பின் கோவிந்தசாமியை
விட்டுவிட்டனர்.
இந்நிலையில் கோவிந்தசாமி திருடியது ஊர் முழுக்க தெரியவர, அவரது குடும்பத்தினர், தோட்ட நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் தோட்ட நிர்வாகத்தினர், நேற்று அளித்த புகார்படி, மிளகு, காபி கொட்டைகளை திருடியதாக கோவிந்தசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடுகின்றனர்.

