ADDED : ஜூன் 22, 2024 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடி, முத்தம்பட்டி அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்த விவசாயி ராம்குமார், 50.
நேற்று மாலை, 4:30 மணிக்கு அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது ராம்குமார் வீடு அருகே கட்டப்பட்டிருந்த, அவரது பசு மாட்டின் மீது, ஆலமரம் முறிந்து விழுந்தது. ராம்குமார், வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து, மரக்கிளைகளை அகற்றியபோது, பசு இறந்திருந்தது. மரத்துக்கு அடியில் சிக்கிய மாட்டின் சடலத்தை மீட்டு, ராம்குமாரிடம் ஒப்படைத்தனர்.