/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளைஞரணி மாநாடு வெறிச்சோடிய ஏற்காடு
/
இளைஞரணி மாநாடு வெறிச்சோடிய ஏற்காடு
ADDED : ஜன 22, 2024 10:40 AM
ஏற்காடு: ஏற்காட்டுக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவர். ஆனால் நேற்று, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில், தி.மு.க., இளைஞரணி மாநில மாநாடு நடந்தது. இதனால் சேலம் மாவட்டத்துக்கு வரும் வாகனங்களின் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
அதன் எதிரொலியாக ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அங்குள்ள படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஓரிரு சுற்றுலா பயணியர் மட்டுமே காணப்பட்டனர். கடந்த வாரம் இதே நாளில் சுற்றுலா பயணியர் குவிந்திருந்ததால் அங்குள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. ஆனால் இந்த வாரம் சுற்றுலா பயணியர் இல்லாததால், வியாபாரமும் இன்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.