/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீடு தேடி வரும் தபால்காரரிடம் டிஜிட்டல் ஆயுள்சான்று பெறலாம்
/
வீடு தேடி வரும் தபால்காரரிடம் டிஜிட்டல் ஆயுள்சான்று பெறலாம்
வீடு தேடி வரும் தபால்காரரிடம் டிஜிட்டல் ஆயுள்சான்று பெறலாம்
வீடு தேடி வரும் தபால்காரரிடம் டிஜிட்டல் ஆயுள்சான்று பெறலாம்
ADDED : அக் 29, 2024 01:17 AM
வீடு தேடி வரும் தபால்காரரிடம்
டிஜிட்டல் ஆயுள்சான்று பெறலாம்
சேலம், அக். 29-
சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு ஓய்வூதியர்கள் நவ., 1ம் தேதி முதல் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் சென்று, ஆயுள் சான்றை சமர்ப்பிக்க ஓய்வூதியர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடி பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்று (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமான, 70 ரூபாயை தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஒ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க முடியும். தற்போது முக அடையாளத்தை வைத்து சான்று வழங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகம் மூலமாக இச்சேவையை வழங்கும் பொருட்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தபால்காரர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்களை தொடர்பு கொண்டு ஓய்வூதியதாரரர்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுவோரும், இந்த வசதியை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடி தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆயுள் சான்றை சமர்ப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.

