/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலாறு கரையோர வனத்தில் யானைகள் கூட்டமாக உலா
/
பாலாறு கரையோர வனத்தில் யானைகள் கூட்டமாக உலா
ADDED : ஜன 03, 2024 11:23 AM
மேட்டூர்: தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள, பாலாற்றங்கரையில் யானைகள் கூட்டமாக உலா செல்கின்றன.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பாலாறு வனப்பகுதி கர்நாடகாவில் அமைந்துள்ளது. மேட்டூர்-மைசூரு நெடுஞ்சாலையோரம் ஓடும் பாலாற்றின் கரையோரம் வனப்பகுதி உள்ளது. கடந்த ஒரு வாரமாக. ஆற்றின் கரையோர பகுதியில் யானை கூட்டங்கள் முகாமிட்டுள்ளன. நேற்று பாலாறு கரையோரம் முகாமிட்ட, ஐந்து பெரிய யானைகள், இரு குட்டிகள் என, ஏழு யானைகள் இலை, மரக்கிளைகளை ஒடித்து சாப்பிட்டு, பாலாற்றில் குட்டை போல தேங்கி நிற்கும் நீரை அருந்தின. தமிழகத்தில் இருந்து பாலாறு வழியாக டூவீலர், கார்களில் சென்ற சுற்றுலா பயணிகள், சாலையோரம் வாகனங்களை நிறுத்தி யானை கூட்டங்களை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.