/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரிய பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
/
கரிய பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜன 17, 2025 06:17 AM
சேலம்: காணும் பொங்கலையொட்டி, சேலம் மாநகர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், குடும்பத்துடன், சேலம், நெத்திமேடு கரியபெருமாள் கோவிலுக்கு வந்தனர்.
பெரும்பாலான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம், பூஜை நடந்தது. பின் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி அடிவார பகுதியில், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பெண்கள், வளையல், அலங்கார பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். தவிர அப்பளம், மிளகாய் பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்ட கடைகளிலும் ஏராளமானோர் குவிந்ததால், வியாபாரம் களைகட்டியது. மாநகர போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.