/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தரண் மருத்துவமனை நடத்திய மாரத்தானில் திரளானோர் பங்கேற்பு
/
தரண் மருத்துவமனை நடத்திய மாரத்தானில் திரளானோர் பங்கேற்பு
தரண் மருத்துவமனை நடத்திய மாரத்தானில் திரளானோர் பங்கேற்பு
தரண் மருத்துவமனை நடத்திய மாரத்தானில் திரளானோர் பங்கேற்பு
ADDED : அக் 28, 2024 04:42 AM
பனமரத்துப்பட்டி: சேலம் தரண் மருத்துவமனையின் தரண் கேன்சர் ஸ்பெஷா-லிட்டி சென்டர் சார்பில், பனமரத்துப்பட்டியில் உள்ள தரண் நர்சிங் கல்லுாரியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. 21.1 கி.மீ., 10 கி.மீ., 6 கி.மீ., என, 3 பிரிவாக போட்டிகள் நடந்தன. அதில் இலக்கை அடைந்து திரும்-பிய பங்கேற்பாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ், காலை உணவு வழங்கப்பட்டன.
இதுகுறித்து தரண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செல்வ-ராஜா, துணை இயக்குனர் குணசேகரன் கூறுகையில், ''புற்-றுநோய் குறித்த விழிப்புணர்வு, அனைத்து மக்களிடையே ஏற்ப-டுத்த வேண்டும் என்ற நோக்கில் மாரத்தான் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கிய இலவச கூப்பன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான மெமோகிராம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான, 'பாப்ஸ்மியர்' பரிசோதனை தரண் மருத்-துவமனையில் செய்து கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. இதன்-மூலம் யாருக்கேனும் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியப்-பட்டால் கீமோதெரபி, ரேடியோதெரபி உதவியுடன் குணப்படுத்-தலாம்,'' என்றனர்.இதில் சேலத்தில் உள்ள தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், அரசு, தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், பிரபல கல்லுாரிகள், விளையாட்டு குழுவினர், சங்கத்தினர் பங்கேற்றனர். மேலும் புற்-றுநோயால் பாதிக்கப்பட்டு தரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெண்களுக்கும் மினி மாரத்தான் போட்டி நடந்தது.