/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும் நாய், ஆட்டை கொன்ற சிறுத்தை
/
வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும் நாய், ஆட்டை கொன்ற சிறுத்தை
வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும் நாய், ஆட்டை கொன்ற சிறுத்தை
வனத்துறையினர் கூண்டுகள் வைத்தும் நாய், ஆட்டை கொன்ற சிறுத்தை
ADDED : செப் 19, 2024 07:55 AM
மேட்டூர்: வனத்துறை சார்பில் கூண்டுகள் வைத்தும், நேற்று முன்தினம் இரவு ஒரு நாய், நேற்று மதியம் ஒரு ஆட்டை சிறுத்தை பிடித்து சென்றன.
சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியம், தின்னப்பட்டி ஊராட்சியில், 10 நாட்களாக ஒரு சிறுத்தை சுற்றித்திரிகிறது. சிறுத்தை கடந்த, 8 முதல் நேற்று வரை, தின்னப்பட்டி ஊராட்சியில் சுரேஷ், தேவராஜ், பெருமாள்
ஆகியோரின் நிலத்தில் புகுந்து, எட்டு ஆடுகள், மூன்று கோழி, ஒரு நாய் ஆகியவற்றை கொன்றது. சிறுத்தையை பிடிக்க கடந்த, 10ல் வனத்துறை சார்பில், இரு கூண்டுகள் வைக்கப்பட்டது. எனினும், சிறுத்தை சிக்கவில்லை. கடந்த, 14ல் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி கொளத்துார் சோதனை சாவடியில்,
விவசாயிகள் மூன்று மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி தலைமையில் சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்ட வனஅலுவலர்கள், ஊழியர்கள், 80 பேர் கடந்த, 14 முதல் சுழற்சி
முறையில் தின்னப்பட்டி ஊராட்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும், கருங்கரடு பகுதியில் இரு இடங்களில் கூண்டு, வெள்ளக்கரட்டூர் பகுதியில் இரு கூண்டுகள் வைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தியும் சிறுத்தை சிக்கவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு கருங்கரடு பகுதியில் விவசாயி தங்கவேலு நிலத்தில் புகுந்த சிறுத்தை, அவர் வளர்த்த நாயை பிடித்து சென்றது. சிறுத்தை செல்வதை அப்பகுதியை சேர்ந்த
விஜயலட்சுமி என்பவர் நேரில் பார்த்துள்ளார். இரவில் மட்டுமே கிராமங்களில் புகுந்து, கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை நேற்று மதியம், 2:00 மணிக்கு வெள்ளக்கரட்டூரில் விவசாயி சின்னபையன்
என்பவரின் செம்மறி ஆட்டை பிடித்து சென்றது கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.விலங்கால் கலக்கம்கொளத்துார், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி குரும்பனுாரில் இருந்து நிலவுக்கல்புதுார் செல்லும் சாலையோரம் பூச்சிக்காடு கிராமம் உள்ளது. அந்த கிராம விவசாயி பிரபு, 35. அவரது நாயை கடந்த, 16 இரவு, 10:00 மணிக்கு,
மர்ம விலங்கு பிடித்து சென்றது. இதுகுறித்து கொளத்துார் வனத்துறை அலுவலர்கள் விசாரிக்கின்றனர். மேலும் பூச்சிக்காடு கிராம விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.