/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் காட்டுத்தீயால் ஏராளமான மரங்கள் நாசம்
/
ஏற்காட்டில் காட்டுத்தீயால் ஏராளமான மரங்கள் நாசம்
ADDED : மார் 18, 2024 04:06 AM
ஏற்காடு: ஏற்காட்டில் சில வாரங்களாக வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் அங்குள்ள மலைப்பகுதியில் மரங்கள் காய்ந்து பசுமை இழந்து வறண்டு காணப்படுகின்றன. 15 நாட்களாக, ஏற்காட்டில் உள்ள வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சேலம் - ஏற்காடு மலைப்பாதை, கருங்காலி கிராமம் உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை, 4:30 மணிக்கு தீப்பிடித்து எரிந்தது. காய்ந்து கிடந்த மூங்கில் மரங்களால் பிடித்த தீ மளமளவென பரவி வனப்பகுதி முழுதும் புகை மூட்டம் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகம் இருந்ததால் தீ அதிகரித்து, 20 ஏக்கர் நிலத்தில் உள்ள மரம், செடி கொடிகள் எரிந்து நாசமாகின. வனம், தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

