/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரசாயன கழிவால் நுரை பொங்கி ஓடும் திருமணிமுத்தாறு
/
ரசாயன கழிவால் நுரை பொங்கி ஓடும் திருமணிமுத்தாறு
ADDED : செப் 25, 2024 01:38 AM
ரசாயன கழிவால் நுரை பொங்கி ஓடும் திருமணிமுத்தாறு
வீரபாண்டி, செப். 25-
சேலம் சேர்வராயன் மலை என அழைக்கப்பட்ட ஏற்காடு மலையில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, மாநகரின் மையப்பகுதி வழியே சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நீர்நிலைகளை நிரப்பி காவிரியாற்றில் கலக்கிறது.
ஆனால் வழக்கத்தை விட குறைந்தளவே ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி ஓடிக்கொண்டிருந்த ஆறு, தற்போது சிறு கால்வாய் போல் சுருங்கி சாக்கடையாக ஓடுகிறது.
இந்நிலையில் ஆற்றில் வழக்கத்தை விட அதிகளவில் ரசாயன கழிவு கலக்கப்படுவதால், கார நெடியுடன் நுரை பொங்க ஓடுகிறது. குறிப்பாக நேற்று, பூலாவரி பிரிவு பாலம் அருகே ஆற்றில் அதிகளவில் நுரையுடன் சென்றது. வீரபாண்டி, புதுப்பாளையம், எஸ்.பாப்பாரப்பட்டி ஏரிகளுக்கு செல்லும் வழியில், வயல்களுக்கு இந்த ஆற்று நீரை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் பயிர்கள் கருகும் ஆபத்து உள்ளது.
அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம், தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து திருமணிமுத்தாற்றை மீட்க முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் உள்ளிட்ட அரசு துறைகளும் ஒன்றிணைந்து, ஆற்றில் கழிவு கலக்காதபடி தடுத்து உரிய நடவடிக்கைகள் எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.