/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பசுங்கன்றை கடித்து கொன்று ரத்தத்தை குடித்த மர்ம விலங்கு
/
பசுங்கன்றை கடித்து கொன்று ரத்தத்தை குடித்த மர்ம விலங்கு
பசுங்கன்றை கடித்து கொன்று ரத்தத்தை குடித்த மர்ம விலங்கு
பசுங்கன்றை கடித்து கொன்று ரத்தத்தை குடித்த மர்ம விலங்கு
ADDED : மே 24, 2024 07:09 AM
மேச்சேரி : மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி அரசமரத்துாரை சேர்ந்த விவசாயி ராமஜெயம், 35.
இவருக்கு அதே பகுதியில் தோட்டம் உள்ளது. அங்கு, 5 மாடுகள், ஒரு பசுங்கன்று குட்டி வளர்த்தார். நேற்று முன்தினம் மாடு, குட்டியை தோட்டத்தில் கட்டிபோட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலை, கன்றுக்குட்டியை, 30 மீ., இழுத்துச்சென்ற மர்ம விலங்கு, அதற்கு மேல் இழுக்க முடியாமல், கன்றின் கழுத்தை கடித்து கொன்று ரத்தத்தை குடித்துச்சென்றது.மேட்டூர் தாசில்தார் விஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், நேற்று சம்பவ இடத்தில் விசாரித்தனர். கன்று இறந்த இடம் டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்கு உட்பட்டது என்பதால், அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள், கன்றை கொன்ற மர்ம விலங்கு எது என விசாரிக்கின்றனர்.