ADDED : ஜன 16, 2024 11:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,: சேலம் அருகில் மான் வேட்டியாடிய கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் தெற்கு வனவர் மணிவண்ணன், 36; மான் வேட்டை குறித்து கிடைத்த தகவலின்படி, சேலம் கோவில்காடு, பெருமாம்பட்டி பகுதியில் விஜய் என்பவரின் தோட்டத்தில், கடந்த, 12ல் ஆய்வு நடத்தினார். அப்போது மானின் நான்கு கால், தலை, தோல், கத்தி, ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தார். இதுகுறித்து சேலம் இரும்பாலை போலீசில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜய் மற்றும் அவருடன் தொடர்புடைய கும்பலை தேடி வருகின்றனர்.