/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அருங்காட்சியகத்துக்கு புது கட்டடம் தயார்
/
அருங்காட்சியகத்துக்கு புது கட்டடம் தயார்
ADDED : நவ 09, 2024 01:06 AM
சேலம், நவ. 9-
சேலத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், 1967ல் செவ்வாய்பேட்டை பிரதான சாலையில் தொடங்கப்பட்டது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரிவாக்கத்துக்கு அரசு அருங்காட்சியக இடம் கையகப்படுத்தப்பட்டதால், பேர்லண்ட்ஸில் உள்ள வாடகை கட்டடத்துக்கு, அருங்காட்சியகம் மாற்றப்பட்டது. அங்கு தொன்மை காசுகள், நாணயங்கள், பல்வேறு கல்வெட்டுகள், சிலைகள், கலை பொருட்கள், மர படிமங்கள், முதுமக்கள் தாழி, நடுகற்கள், பழங்கால ஆயுதங்கள், ஓலைச்சுவடிகள் உள்பட, 1,940 பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. இடப்பற்றாக்குறையால் கல்வெட்டுகள், சிலைகள் உள்ளிட்டவை வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாக அரசு அருங்காட்சியகம் கட்ட, 2022ல், 3.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அஸ்தம்பட்டி வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு தரைத்தளம், முதல் தளம் என கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரிய பொருட்களை மக்கள் பார்வையிடும்படியும், பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும் இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. திறப்பு விழா முடிந்த பின் அரசு அருங்காட்சியகத்துக்கு ஒப்படைக்கப்படும் என, பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.