/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரு வழிப்பாதையில் வந்த பொக்லைன் ஓமலுார் தம்பதி உயிரை பறித்தது
/
ஒரு வழிப்பாதையில் வந்த பொக்லைன் ஓமலுார் தம்பதி உயிரை பறித்தது
ஒரு வழிப்பாதையில் வந்த பொக்லைன் ஓமலுார் தம்பதி உயிரை பறித்தது
ஒரு வழிப்பாதையில் வந்த பொக்லைன் ஓமலுார் தம்பதி உயிரை பறித்தது
ADDED : அக் 28, 2025 01:56 AM
ஓமலுார், தேசிய நெடுஞ்சாலையில், ஒருவழிப்பாதையில் வந்த பொக்லைன் வாகனம் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற கணவன், மனைவி பலியாயினர்.
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே சிக்கம்
பட்டியை சேர்ந்தவர் முருகன், 40, கல் உடைக்கும் தொழிலாளி. மனைவி பார்வதி, 36. இவர்களுக்கு சக்திவேல், லலித் என இரு மகன்கள் உள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாளையம்புதுாரில் உறவினர் வீட்டு புனித நீராட்டு விழாவுக்கு செல்ல, முருகன், பார்வதி ஆகியோர், நேற்று காலை ஹீரோ ேஹாண்டா பைக்கில் தலைக்கவசம் அணியாமல் புறப்பட்டனர்.
காலை, 6:15 மணியளவில் தீவட்டிப்பட்டி அடுத்துள்ள ஜோடுகுளி அருகே, சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்
சாலையில் சென்ற போது, தொப்பூரிலிருந்து எதிர் திசையில் (ஒருவழிப்பாதையில்) வந்த பொக்லைன் வாகனம், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீவட்டிப்பட்டி போலீசார் இருவரது உடல்களை மீட்டனர். பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பி சென்ற ஓட்டுனரை தேடி வருகின்றனர்