/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விளக்கு எரியாததால் விபத்துக்கு 'வழி'
/
விளக்கு எரியாததால் விபத்துக்கு 'வழி'
ADDED : ஜன 24, 2025 04:01 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், சீலநாயக்கன்பட்டி முதல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை, பிரதான சாலை நடுவே மின் விளக்குகள் உள்ளன. நிலவாரப்பட்டியில் பாலம் கட்டுமான பணி நடக்கிறது. அங்கிருந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை, மின்விளக்கு சரியாக எரியவில்லை.
ஒரு கம்பத்தில் இரு விளக்குகள் உள்ள நிலையில், ஒன்று மட்டும் எரிகிறது. அதேபோல் ஒரு கம்பத்தை விட்டு அடுத்த கம்பத்தில் உள்ள விளக்குதான் எரிகிறது. இதனால் இருளில் சாலையை கடக்கும் உள்ளூர் மக்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சர்வீஸ் சாலையில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் உள்ளது. தவிர வழிப்பறிக்கும் வாய்ப்புள்ளதால், மின் விளக்குகளை பராமரித்து எரிய வைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

