/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி
/
தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி
ADDED : செப் 28, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டவாளத்தை கடக்க
முயன்றவர் ரயில் மோதி பலி
சேலம், செப். 28-
சேலம் வழியே, நேற்று முன்தினம் இரவு திருவனந்தபுரம்-ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, கருப்பூர் அருகே பூட்டப்பட்ட ரயில்வே கேட் தண்டவாள பகுதியில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., முருகன் தலைமையிலான போலீசார், வாலிபர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கருப்பூரை சேர்ந்த ரமேஷ், 38, என தெரியவந்தது. வேலைக்கு சென்று விட்டு, கருப்பூர் அருகே பூட்டப்பட்ட ரயில்வே கேட் உள்ளே புகுந்து, தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.