ADDED : செப் 13, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காடையாம்பட்டி: காடையாம்பட்டி, ஜோடுகுளியை சேர்ந்த, 16 வயது சிறுமி, பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சோதனையில், சிறுமி, 6 வார கர்ப்பமாக உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுமியின் பெற்றோர் நேற்று அளித்த புகார்படி, ஓமலுார் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.