/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாய் உடைந்து பீறிட்டு காவிரியில் கொட்டிய குடிநீர்
/
குழாய் உடைந்து பீறிட்டு காவிரியில் கொட்டிய குடிநீர்
குழாய் உடைந்து பீறிட்டு காவிரியில் கொட்டிய குடிநீர்
குழாய் உடைந்து பீறிட்டு காவிரியில் கொட்டிய குடிநீர்
ADDED : ஏப் 24, 2025 02:09 AM
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர், தொட்டில்பட்டி காவிரி கரையோரம், காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. அதன்மூலம் தினமும், 3 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து சுத்திகரித்து, காடையாம்பட்டி, ஓமலுார், கோனுார் பகுதிக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் - தொப்பூர் நெடுஞ்சாலையில் மேட்டூர் அணை உபரி நீர் செல்லும் காவிரி பாலத்தின் மீதுள்ள காடையாம்பட்டி திட்ட குழாயில் நேற்று மாலை, 4:30 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து குடிநீர் பீறிட்டு வெளியேறி உபரிநீர் வெளியேறும் காவிரியில் கலந்தது.
பவானி - தொப்பூர் நெடுஞ்சாலையிலும் குடிநீர் வெளியேறி வீணானது. அரை மணி நேரம் குடிநீர் வெளியேறிய நிலையில், வடிகால் வாரிய அலுவலர்கள், குடிநீரை நிறுத்தினர். தொடர்ந்து இரவு, 8:00 மணி வரை குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை, 'வெல்டிங்' மூலம் ஒட்டும் பணி நடந்தது. பின் மீண்டும் குடிநீர் வினியோகிக்கும் பணி தொடர்ந்தது.

