/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தடுப்பணையில் சிக்கிய அரியவகை விரால் மீன்
/
தடுப்பணையில் சிக்கிய அரியவகை விரால் மீன்
ADDED : அக் 14, 2024 04:52 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே கல்வராயன்மலையில் தொடர் மழையால் ராம-நாயக்கன்பாளையம் வழியே செல்லும் கல்லாறு, சிற்றோடை-களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதில், மலை அடிவார பகுதி-யான ஏக்கர் காலனி, அய்யங்கரடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் செல்கிறது. நேற்று ராமநாயக்-கன்பாளையம் கல்லாற்றில் உள்ள தடுப்பணையில் இளைஞர்கள் மீன் பிடித்தனர். அப்போது பெரிய அளவிலான குரவை எனும் விரால் மீனை பிடித்தனர். 4.8 அடி நீளத்தில், 10 கிலோ இருந்-தது. இதை மக்களும் பார்த்து வியப்படைந்தனர்.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'குரவை எனும் விரால் மீனை ஒரு அடி முதல், 2 அடி வரை பார்த்துள்ளோம். ஆனால் தற்போது, 4.8 அடி நீளத்தில், 10 கிலோ மீனை பார்த்தது ஆச்சரியமாக உள்ளது' என்றனர்.