/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிறந்த நாளில் மது அருந்தி விட்டு கிணற்றில் குளித்த மாணவர் பலி
/
பிறந்த நாளில் மது அருந்தி விட்டு கிணற்றில் குளித்த மாணவர் பலி
பிறந்த நாளில் மது அருந்தி விட்டு கிணற்றில் குளித்த மாணவர் பலி
பிறந்த நாளில் மது அருந்தி விட்டு கிணற்றில் குளித்த மாணவர் பலி
ADDED : ஜூன் 03, 2024 07:07 AM
தலைவாசல் : பிறந்த நாளில் மது அருந்திவிட்டு, தண்ணீரில் குளித்த கல்லுாரி மாணவர் உயிரிழந்தார்.
தலைவாசல் அருகே, சார்வாய் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் தனுஷ், 19. இவர், ஆத்துார் அருகே வடசென்னிமலை அரசு கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சித்தேரி கிராமத்தில் உள்ள தன் சகோதரி வீட்டிற்கு, கல்லுாரி விடுமுறைக்கு சென்று, ஒருவாரமாக இருந்துள்ளார். நேற்று தனுஷ்க்கு பிறந்த நாள் என்பதால், நண்பர்களுடன் மாலை, 4:00 மணியளவில், சித்தேரி வழியாக செல்லும் வசிஷ்ட நதி கரையோர பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, மதுபோதையில் தடுமாறியுள்ளார்.
தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த வீராசாமி, 48, என்பவரது கிணற்றில் குளித்துள்ளார். நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீருக்குள் தடுமாறியுள்ளார். அதையறிந்த நண்பர்கள், உறவினர்கள், தனு ைஷ மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தனுஷ் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.